ஆசியான் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Singapore Foreign Minister Vivian Balakrishnan

ஆசியான் கூட்டங்களில் பங்கேற்பதற்காக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வரும் பிப்ரவரி 3, 4 ஆகிய தேதிகளில் இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தாவில் நடைபெறும் 32வது ஆசியான் ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டம் (32nd ASEAN Coordinating Council Meeting) மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் (ASEAN Foreign Ministers’ Retreat) பங்கேற்பதற்காக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஆசியானின் முன்னுரிமைகள் குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதிப்பார்கள், ஆசியானின் சமூகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் மற்றும் வெளி பங்காளிகளுடன் ஒத்துழைப்பது மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளனர்.” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தோனேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு நான் செல்கிறேன்; அங்கு நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மியான்மர் விவகாரம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.