மூன்றாவது முறையாக துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் லீ – உச்சி மாநாட்டின் குறிக்கோள் என்ன?

PM Lee met kamala harris at US

சிங்கப்பூர் பிரதமர் லீ மே 10ஆம் தேதி அமெரிக்க பயணத்தை தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற ASEAN – US உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மே 14 ஆம் தேதி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டார்.

இந்த உச்சி மாநாடு ,தென்கிழக்கு ஆசியாவிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது .

தனது அமெரிக்கப் பயணத்தின் போது மீண்டும் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார். அமெரிக்காவின் காலநிலைக்கான சிறப்பு தூதர் John Kerry மற்றும் பல அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

உலகம் முழுவதிலும் அதிகரித்துவரும் கார்பன் வாயுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இரண்டு நாடுகளும் எவ்வாறு ஒத்துழைக்கும் என்றும் மேலும் கார்பன் குறைப்பு ஒத்துழைப்பை எப்படி தீவிரம் ஆக்குவது என்பது குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ,அமெரிக்காவை மீண்டும் வரவேற்கிறது என்பதை பிரதமர் லீ தெரிவித்தார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கிய மதிய உணவில் Asean தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கமலா ஹாரிஸை பிரதமர் லீ சிங்கப்பூரில் சந்தித்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் வாசிங்டன் டி சி க்கு வந்த பிரதமர் லீ அவரை இரண்டாவது முறையாக சந்தித்துள்ளார். எனவே கடந்த ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக இருவரும் சந்திப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்

பிரதமர் லீ உடன் அமெரிக்க பயணத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அங்கிருந்த தனது சகாக்களை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான அதிக பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவரித்தார்.