ஆசியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் முதலிடம் பிடித்த சாங்கி விமான நிலையம் – பின்தங்கியுள்ள ஆசியா

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பன்னாட்டு விமானப் போக்குவரத்தில் ஆசிய விமான நிலையங்களில் முதலிடம் பிடித்தது.
சிங்கப்பூரின் ஆலோசனை நிறுவனமான Sobie Aviation தொகுத்துள்ள தரவுகளின் அடிப்படையில்,7.3 மில்லியன் பயணிகளைக் கொண்டு சாங்கி விமான நிலையம் ஆசியாவின் முதல் இடத்தைப் பிடித்தது.

பரபரப்பான விமான நிலையங்களின் வரிசையில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் (3.2 மில்லியன்), பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையம் (3.2 மில்லியன்), சியோல் இன்சியான் விமான நிலையம் (2.9 மில்லியன்) மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (2.6 மில்லியன்).
ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் போன்றவை அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளன.

சாங்கி விமான நிலையம் ஜூன் 2022 இல் மட்டும்,2.93 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் 50 சதவீதத்தைக் குறிக்கிறது.தொற்றுநோய்க்கு முன்னர், ஹாங்காங்கின் விமான நிலையம் சர்வதேச பயணிகளின் அடிப்படையில் ஆசியாவிலேயே தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

தொற்றுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, சில பிராந்தியங்களில் 65 முதல் 85 சதவீதத்தை எட்டியுள்ளன.ஆசியா இன்னும் உலகின் பிற பகுதிகளை விட பின்தங்கியுள்ளது.
ஜூன் மாதத்தில், ஆசியாவில் சர்வதேச பயணிகள் தேவை, தொற்றுநோய்க்கு முந்தைய அளவுகளில் 30 சதவீதமாக இருந்தது.