சிங்கப்பூரில் குறைந்த விலையில் 40 ஆண்டு காலம் உணவு வழங்கிய கடை மூடல்.. ஓய்வு எடுக்க முடிவு செய்தார் 78 வயதான உரிமையாளர்

asia-western-food-closes

சிங்கப்பூரில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கிவந்த, தோ பயோவில் உள்ள ஆசியா வெஸ்டர்ன் ஃபுட் நிறுவனத்தை தற்போது மூடப்போவதாக 78 வயதான அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.

Toa Payoh Makan Places என்ற Facebook குழுவில் லூய் அங்கிள் ஓய்வு பெற போவதாகவும், இதனால் கடையை மூட முடிவு செய்துள்ளதாகவும் 78 வயது முதியவரின் மகள் பதிவிட்டுள்ளார்.

ஆசியா வெஸ்டர்ன் ஃபுட் (Asia Western Food) கடை, பிளாக் 116 Toa Payoh Lorong 2ல் அமைந்துள்ளது.

மரினா பே சாண்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த கொடூரம்: துப்பாக்கி சுட்டு பலியான போலீஸ் அதிகாரி

கடையின் 38 ஆண்டுகால வரலாற்றில், அதே குறைந்த விலையில் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது பெரும் சவாலானது என்று அவரின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

சிறு குழந்தைகளாக தன்னிடம் வந்த வாடிக்கையாளர்கள் வளர்ந்து தங்கள் குழந்தைகளுடன் மீண்டும் மீண்டும் கடைக்கு வந்த நினைவுகள் மனதிற்கு இதமாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

லூய் அங்கிள், தனது வாடிக்கையார்களின் நன்மதிப்பை பெற்று அவர்களுக்கு சிறந்த உணவை, குறைந்த விலையில் வழங்கி வந்தார்.

ஏல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருப்பது உண்மை தான், அவர் தற்போது ஓய்வு பெற்று தனது குடும்பத்துடன் நேரங்களை செலவிட உள்ளதாகவும் கூறியுள்ளார் அவர்.

பீச் ரோட்டில் ஆடவரை தாக்கிய சந்தேகத்தில் ஒருவர் கைது; காயங்களுடன் இருந்த ஆடவர் மருத்துவனையில் அனுமதி