ஆசிய விளையாட்டு போட்டிகள்- ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!

ஆசிய விளையாட்டு போட்டிகள்- ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!
File Photo

 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா, வியட்நாம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்

செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று ஆசிய விளையாட்டுத் தொடரின் ஹாக்கி ஆடவர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், சிங்கப்பூர் ஆடவர் ஹாக்கி அணி, இந்திய ஆடவர் ஹாக்கி அணியை எதிர்க்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 16-1 என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது.

பாய்மரப் படகுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர்கள்!

இந்திய ஹாக்கி ஆடவர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்களை அடித்து அசத்த, மற்ற வீரர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.