பாய்மரப் படகுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர்கள்!

பாய்மரப் படகுப் போட்டியில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் வீரர்கள்!
Photo: Singapore National Olympic Council

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இன்று (செப்.26) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டியில், பெண்களுக்கான ILCA4 பிரிவில் கலந்து கொண்ட சிங்கப்பூர் வீராங்கனை கெய்ரா கார்லைல் (Keira Carlyle) வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்

அதேபோல், ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட Nacra17 கலப்புப் பிரிவில் கலந்து கொண்ட சிங்கப்பூரைச் சேர்ந்த ஜஸ்டின் லியுவும் (Justin Liu), டென்னிஸ் லிம்மும் (Denise Lim) 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர். இதில் டென்னில் லிம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பாய்மரப் படகுப் போட்டியில் மட்டும் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை சிங்கப்பூர் வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.