“ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நில்லுங்க” என சொன்னவருக்கு அடி உதை – வைரல் வீடியோ

attacks safe distance viral video
STOMP

JCube ஷாப்பிங் மால் உணவகத்தில் வரிசையில் நின்ற இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டது வைரல் ஆகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 26 அன்று இரவு 8.20 மணியளவில் Astons Specialitiesக்கு வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்டாம்ப் கூறியுள்ளது.

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

வரிசையில் நின்ற இளைஞர் ஒருவரிடம் மற்றொருவர் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுமாறு சொன்னார், இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஆடவரை தாக்கியதாக ஸ்டாம்ப் தெரிவித்துள்ளது.

அதாவது பின்னால் நின்ற இளைஞரை ஆடவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

அதற்கு “நாம் தான் முகக்கவசம் அணிந்துள்ளோம், பிறகு ஏன் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்? ” என்று இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கி சண்டையில் முடிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அந்த ஆடவர் காவல்துறையை அழைத்ததாகவும், அது பற்றி புகார் அளிக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. (VIDEO)

சிங்கப்பூர் பயணிகளுக்கு இனி அனைத்தையும் இலகுவாக்கும் “MyICA” ஆப்: Visit pass-களையும் நீட்டிக்கலாம்!