ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றம்!

Photo: Sri Mariamman Temple

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இக்கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி மாதம், முக்கிய விஷேச நாட்களில் சிறப்புப் பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் மரினா பே கால்வாயில் மிதந்த பணம் – வைரலான வீடியோ !

அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ஸ்ரீ திரௌபதை அம்மன் பால்குட அபிஷேகத்தில் காலை 10.00 மணிக்கு பக்தர்கள் கலந்துக் கொள்ளலாம்.

பால்குட சீட்டுகளை கோயில் அலுவலகம் (அல்லது) http://smt.org.sg/ என்ற கோயில் இணையதளப் பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம். கோயில் தயாரித்துள்ளப் பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த முடியும். பால்குடம் எடுக்கும் பக்தர்கள் தங்களது நேற்றிக் கடனை செலுத்த கோயில் வளாகத்தை ஒருமுறை மட்டும் சுற்றி வரலாம்.

சுறுசுறுப்பான சுட்டிக் குழந்தையை வைத்துக்கொண்டு இப்படிதான் வேலையைத் திட்டமிட வேண்டும் ! – சிங்கப்பூரைச் சேர்ந்த தாயின் திட்டப்பணி

ஆகஸ்ட் 1- ஆம் தேதி அன்று மாலை அர்ச்சனைகள் (அல்லது) முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம் பெறாது. கோயில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு பூஜைகளைப் பார்வையிடலாம். மாலை 05.05 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் திரௌபதை கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் ஸ்ரீ திரௌபதை அம்மன் கரக ஊர்வலம் நடைபெறும்.

மாலை 06.00 மணிக்கு ஆலய பூஜையும், மாலை 06.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை புண்ணிய வஜனம் வாஸ்து சாந்தி ஹோமமும், மாலை 07.45 மணிக்கு ஸ்ரீ திரௌபதை முதலிய சன்னதிகளின் பூஜையும் நடைபெறும். இரவு 08.30 மணிக்கு அம்மன் ஊர்வலமும், இரவு 09.15 மணிக்கு ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றமும் நடைபெறவுள்ளது. இரவு 09.45 மணிக்கு மகாபாரத வாசித்தலும், இரவு 10.00 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறவுள்ளது.

“அன்புடன் அப்பா” – மகனை உலகிற்கு வரவேற்க உடலை 8 மாதங்களில் செதுக்கிய சிங்கப்பூர் நபர்

கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பூஜைகளின் நேரலையை மாலை 05.05 மணி முதல் https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் காணலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) https://heb.org.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.