வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா- வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கைக்கொடுக்கும் சிங்கப்பூர்!

Photo: Ministry Of Defence, Singapore

ஆஸ்திரேலியா நாட்டின் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பியதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆஸ்திரேலியா அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து மார்ச் 27 முதல் மீண்டும் தொடங்குகிறது!

குறிப்பாக, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாகாணங்களில் மினசாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கனமழை. வெள்ளப்பெருக்கு காரணமாக, சுமார் 10- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கைகொடுக்கிறது சிங்கப்பூர். சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று (08/03/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், ” சிங்கப்பூர் விமானப்படையின் (Republic of Singapore Air Force- ‘RSAF’) இரண்டு CH-47F சினூக் ஹெலிகாப்டர்களை (CH-47F Chinook Helicopters) குயின்ஸ்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய ராணுவ விமானப் பயிற்சி மையத்தில் ஓக்கி (Oakey) பிரிவில் இருந்து, மார்ச் 7- ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படையினரின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஹெலிகாப்டர்கள் குயின்ஸ்லாந்த் (Queensland) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாகாணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

கூடாரங்கள், போர்வைகள், தயாரான உணவுகள், தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பையும் சிங்கப்பூர் ஆயுதப் படை வழங்கவுள்ளது. இந்த தொகுப்பு நேற்று (08/03/2022) சிங்கப்பூரில் இருந்து RSAF C-130 விமானம் மற்றும் RSAF A330 மல்டி ரோல் டேங்கர் (RSAF A330 Multi-Role Tanker Transport) மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சிங்கப்பூரின் நெருங்கிய பங்காளிகளில் ஒன்றாகும். தேவைப்படும் நேரங்களில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைக்கு (Australian Defence Force- ‘ADF’) உதவ சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படை (Singapore Armed Forces- ‘SAF’) தயாராக உள்ளன”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.