ஆஸ்திரேலிய விமானப்படையுடன் பயிற்சி மேற்கொண்ட சிங்கப்பூர் விமானப்படை! – அமெரிக்க நிறுவனம் உருவாக்கிய நவீன போர் விமானம்

சிங்கப்பூர் குடியரசு விமானப்படை வீரர்கள்,ஆஸ்திரேலிய அரசு விமானப்படையின் F35 போர்விமான வீரர்களுடன் சேர்ந்து இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டனர்.போரின் போது அந்த விமானத்தை எப்படி ஒருங்கிணைப்பது என்றும் அந்த விமானத்தின் ஆற்றல் பற்றியும் பயிற்சியில் அறிந்து கொண்டனர்.

இந்த போர் விமானத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியது.அந்த போர் விமானம் உலகின் ஆக நவீன போர் விமானம் என்று கருதப்படுகிறது.இந்த போர் விமானங்களைப் பற்றி சிறந்த முறையில் புரிந்து கொள்ள அந்தப் பயிற்சி உதவி இருப்பதாக படைத்தளபதி கூறினார்.

கருத்தரங்கு ஒன்றில் நான்காம் தலைமுறை,ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை ஒருங்கிணைத்து ஆற்றலை எப்படி மேம்படுத்துவது என்பது போன்றவற்றை அவர்கள் விவாதித்தனர்.

F-35 ரக போர் விமானங்களை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும் வீரர்கள் தெரிந்து கொண்டார்கள் என்று முகநூலில் சிங்கப்பூர் குடியரசு விமானப் படை தெரிவித்தது.