சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய விமானி – அதிகாரிகளை உதைத்துக் கடிக்க முயன்ற சம்பவம்

australia jet pilot singapore police arrested

சிங்கப்பூரில் அரசு ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை செய்தால் என்ன நடக்கும் என்பது பின்வரும் செய்தியின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.2018 ஆம் ஆண்டு, ஜூன் 14 அன்று மாலை மெரினா பே பகுதியில் உள்ள ஹோட்டலில் Cameron Lachlan Milne (41) என்ற ஆஸ்திரேலிய தனியார் ஜெட் விமானி மது அருந்தியதாக கூறப்படுகிறது.

ஜூன் 15ஆம் தேதி அதிகாலை 1:30 மணி அளவில் அருகில் உள்ள வணிக வளாகத்தில் தண்ணீர் வாங்குவதற்காக பாரிலிருந்து வெளியேறி உள்ளார்.அங்கு கேபிள் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த லாரி மீது ஏறி உள்ளேயிருந்த உபகரணங்களை எடுத்து வீச ஆரம்பித்தார்.

Milne-ன் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குடி போதையில் தொந்தரவு செய்து கொண்டிருந்த விமானியை கைது செய்தனர். கைது செய்து காருக்குள் ஏற்றிய பின்பு அதிகாரிகள் அமர்ந்திருந்த இருக்கைகளை பலமுறை உதைத்துள்ளார்.

அவரைத் தடுக்க முயன்ற அதிகாரியின் கையைக் கடிக்க முயன்றுள்ளார் மேலும் அவதூறான வார்த்தைகளை பேசியுள்ளார். மார்ச் 18 அன்று 10 வார சிறை தண்டனையும் S$ 5000 அபராதமும் விதிக்கப்பட்டது. பொது ஊழியர் மீது தாக்குதல் நடத்துதல், தகாத வார்த்தைகளை பேசுதல், அவர்களது கடமையை செய்ய விடாமல் தடுத்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

அவரைத் தண்டனைக்குப் பிறகு May 11 நாடுகடத்தப்பட்ட அவர், மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவரது Employment pass-ம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அரசு அதிகாரிகளிடம் அடங்கிப் போவது நல்லது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.