JB சோதனைச் சாவடியில் தானியங்கி சுங்க அனுமதி நிறுத்தம் – என்ன காரணம்?

automated-customs-clearance-jb-suspended
Wikipedia

சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) சோதனைச் சாவடியில் தானியங்கி சுங்க அனுமதி நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அதாவது அக்டோபர் 16 முதல் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு அந்த நிறுத்தம் தொடரும் என்று மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

சென்னை, கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு டன் கணக்கில் பறக்கும் தீபாவளி இனிப்புகள்

சோதனைச் சாவடியில் ஆட்டோகேட் மாற்றுதல் மற்றும் நிறுவுதல் பணிகள் அக்.16 முதல் நவ.10 வரை மேற்கொள்ளப்படும் என்று சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய குடிமக்களுக்கு தானியங்கி வாயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்பதையும் அந்த பதிவில் அது குறிப்பிட்டுள்ளது.

ஆனால், எத்தனை தானியங்கி நுழைவுகள் வழக்கம் போல் செயல்படும் என்று குறிப்பிடவில்லை.

கவுண்டர்கள் 1 – 4

மலேசிய நாட்டு குடிமக்களுக்கு கவுண்டர் 1 – 4 செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

கவுண்டர் 5

மூத்த குடிமக்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மலேசிய நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு செயல்படும்.

கவுண்டர்கள் 6 – 18

அனைத்து பாஸ்போர்ட்டுகளுக்கும் செயல்படும்.

சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு XBB வகை சோதனை கட்டாயம் – அறிவிப்பு செய்த நாடு