இனிமேல் தப்பிக்கவே முடியாது! – தானியங்கு சிறுநீர் பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்து அசத்தும் பொறியாளர்கள்!

போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர் பொறியாளர்கள் அசத்தலான சோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.உலகிலேயே முதல் தானியங்கு சிறுநீர் பரிசோதனைக் கருவி மூலம் போதைப்பொருள் பயன்பாட்டை அடையாளம் காணமுடியும்.

பரிசோதனைக் கருவியின் முன்னோட்டம்,சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் உள்ள போதைக்கு அடிமையானவர்களிடம் மேற்கொள்ளப்படுகிறது.இந்தக் கருவி 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை முழுமையாக சோதனை செய்யப்படும்.

HTX என்ற தனியார் நிறுவனம் சிங்கப்பூர் சிறைச் சேவை இயக்கத்துடன் இணைந்து புதிய கருவியை அறிமுகப்படுத்தியது.இந்த தானியக்க கருவியானது உணர்கருவிகள்,அதிநவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுநீரைச் சேமித்த பத்து நிமிடங்களில்,சிறுநீரில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதா என்பதை அடையாளம் காணும்.அதிகாரிகளின் மேற்பார்வை அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது.