பெருமையா இருக்கு! இந்தியாவுக்கு சிங்கப்பூர் அரசு கொடுத்த கௌரவம்!

சிறப்பாக சேவை புரிந்ததற்கான பதக்கத்தை முன்னாள் இந்திய கடற்படை தலைமை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் சுனில் லன்பாவுக்கு சிங்கப்பூர் அரசு வழங்கியது. சி

ங்கப்பூர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூர் அதிபர் எச் இ அலிமா யாக்கூப்புக்கு பதிலாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் என்ஜி எங் ஹென், விருது வழங்கினார்.

இந்தியா – சிங்கப்பூர் இடையே பாதுகாப்புத்துறை மற்றும் கடற்படையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொண்ட பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது. அட்மிரல் சுனில் லம்பா இந்திய கடற்படை தலைமை தளபதியாக இருந்த போது சிங்கப்பூர் – இந்தியா இடையே இருதரப்பு கடல்சார் கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை மூலம் நடைபெற்றது. இவரது தலைமையின் கீழ், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இவ்விருதைப் பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள ஓய்வு பெற்ற அட்மிரல் சுனில் லம்பா, அந்நாட்டு ராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங்க், கடற்படை தளபதி ஆரோன் பெங்க் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.