அனைத்துலக விருது பெற்ற சிங்கப்பூர் மாணவர்கள் – லாப நோக்கமற்ற அமைப்புகளை நிறுவியதற்காக டயானா விருது

MHA Awards Singapore

சிங்கப்பூரில் வசதியில்லாத ஏழைகளுக்கு உதவும் லாப நோக்கமற்ற அமைப்புகளை நிறுவி நடத்தி வரும் சிங்கப்பூர் மாணவர்கள் இருவருக்கு அனைத்துலக டயானா விருது வழங்கப்பட்டுள்ளது.

நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் பயிலும் 16 வயது மாணவியான அனன்யா ராவ் ,யேல்-என்யுஎஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டம் பெற்ற 23 வயது நூர் ஹசிம் அப்துல் நாசர் இருவரும் இம்மாதம் 1-ஆம் தேதி காணொளி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

சமூக சேவையில் இந்தத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் 9 முதல் 25 வரையிலான வயதுடையோரை இந்த விருது அங்கீகரிக்கிறது.காலங்கடந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது.29 நாடுகளைச் சேர்ந்த 180 இளைஞர்கள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

சிங்கப்பூரில் ஓவியத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள நோயாளிகளுடன் தொடர்புகொள்ளச் செய்யும் முயற்சியை 2020-ஆம் ஆண்டு அனன்யா தொடங்கினார்.தற்போது 40-க்கும் அதிகமான தொண்டூழியர்கள் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து இணைந்துள்ளனர்.

உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேசியப் பல்கலைக்கழக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிலையத்துடன் இணைந்து ஓவியப் போட்டியை இந்த அமைப்பு நடத்தியது.சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துவது ஒரு சிக்கலான,கடினமான பயணம் என்றாலும் இது போன்ற விருதுகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதாக ஹசிம் குறிப்பிட்டார்.