சென்னையில் அயலகத் தமிழர் தின விழா தொடக்கம்!

Photo: Tamilnadu Government

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாட்கள் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழாவை ஜனவரி 11- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து முன்னிலை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தகக் காட்சி அரங்குகளையும் அவர் துவக்கி வைத்தார்.

பட்டப்பகலில் ஆயுதம் வைத்து கொள்ளையடிக்க முயற்சி – பெண் ஒருவர் மீது தாக்குதல்

அயலகத் தமிழர் தினக் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாளான ஜனவரி 12- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேரூரையாற்றுகிறார்.

விசா இல்லாமல் உலகின் 192 இடங்களுக்கு பயணிக்கலாம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் சிங்கப்பூர் 2ஆம் இடம்!

இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, மருத்துவர் கனிமொழி என்.வி.என்.சோமு, அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசுச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் மகேஸ்வரன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் ஆர்.செல்வராஜ் இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., கயானா நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மற்றும் துணை அதிபர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் நாட்டின் முன்னாள் இடைக்கால அதிபர் மற்றும் துணை அதிபர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இலங்கை ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுமந்திரன், உலகத் தமிழ் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.