சிங்கப்பூரில் இனி குழந்தை பிறந்தால் S$11,000 போனஸ் – 3 அல்லது அதற்கு மேல் S$13,000 போனஸ்

Baby Bonus increased Budget 2023
(Photo: Pixabay)

சிங்கப்பூரில் பிப்ரவரி 14 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பேபி போனஸ் ரொக்கப் பரிசு தொகை S$3,000 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தனது பட்ஜெட் உரையின்போது அறிவித்தார்.

குழந்தைக்கு ஆறரை வயதாகும் வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நிதி உதவியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெடித்து தீப்பற்றி எரிந்த லாரி – விரைந்து வந்த SCDF… என்னதான் நடந்தது?

தற்போது, ​​பெற்றோர்கள் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது குழந்தைக்கு பேபி போனஸ் ரொக்கப் பரிசாக தலா S$8,000 மற்றும் மூன்றாவது குழந்தை மற்றும் அதற்கு அப்பால் S$10,000 பெறுகின்றனர். குழந்தை பிறந்த பிறகு முதல் 18 மாதங்களில் ஐந்து தவணைகளில் அந்த போனஸ் பணம் வழங்கப்படுகிறது.

இனி, பிப்ரவரி 14 முதல் பிறக்கும் முதல் மற்றும் இரண்டாவது குழந்தைக்கு S$11,000 மற்றும் மூன்றாவது குழந்தை மற்றும் அதற்கு மேல் பிறக்கும் குழந்தைகளுக்கு S$13,000 வழங்கப்படும்.

பெற்றோர் சட்டப்படி திருமணம் செய்திருக்க வேண்டும். அதே போல, குழந்தை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தால் போனஸ் பணப் பரிசு வழங்கப்படும்.

காதலர் தினம்: “மனைவியுடன் வாங்க 50% சலுகையை தட்டிட்டு போங்க” – சிங்கப்பூர் கிளப் அதிரடி