சிங்கப்பூர் பேட்மிட்டன் ஓபன் (SBO) 2022 – பிவி சிந்து உட்பட பிரபல பேட்மிட்டன் வீரர்கள் பங்கேற்பதாக தகவல்

SBO 2022

Covid-19 தொற்று காரணமாக இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டிருந்த சிங்கப்பூர் பேட்மிட்டன் ஓபன் (SBO) மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் உள்ள விளையாட்டு அரங்கில் ஜூலை 12 முதல் ஜூலை 17 வரை நடைபெறுவதாக கூறப்படும் போட்டி (SBA) சிங்கப்பூர் பூப்பந்து சங்கத்தால் சிங்கப்பூரின் முதன்மையான பேட்மிட்டன் போட்டி என்று விவரிக்கப்படுகிறது.

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக 2020 மற்றும் 2021-ல் ரத்து செய்யப்பட்ட போட்டியானது, பயணம் மற்றும் மக்கள் கூட்டம் மீதான சுகாதார கட்டுப்பாடுகள் மீண்டும் தளர்த்தப்பட்டதால் மீண்டும் நடத்தப்பட உள்ளது.

S$ 516000 செலவில் நடத்தப்படும் SBO ஆனது, அதிகளவிலான மக்களை மீண்டும் வரவேற்கும் முதல் marquee விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் முக கவசம் அணிவதற்கான திறன் வரம்பு 75% நீக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜேகே டெக்னாலஜியின் நிர்வாக இயக்குனர் Eugene Ang நிகழ்வில் ஸ்பான்ஸராக உள்ளார்.”நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதை SBO 2022 குறிக்கும் ” என்று அவர் குறிப்பிட்டார்.

SBO 2022- ன் அமைப்புத் தலைவர் Ng Yoke Weng ” உலகின் மிகப்பெரிய பேட்மிட்டன் வீரர்களை SBO 2022 ஈர்த்துள்ளது ” என்று கூறினார். Lee Chong Wei, Lin Dan, PV Sindhu, Kento Momota மற்றும் Viktor Axelsen போன்ற மிகப்பெரிய பேட்மிட்டன் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே SBO 2022-ல் அனுமதிக்கப்படுவார்கள்.டிக்கெட்டுகளுக்கான விபரங்கள் அறிவிக்கப்படும் போது SBO 2022 விளையாட்டு நிகழ்வுகளுக்கு தேவையான மற்ற விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது