‘பாலி, பினாங்கு உள்ளிட்ட நகரங்களுக்கு ‘VTL’ விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான ‘VTL’ விமான சேவையை மேலும் சில நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளது சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்

இந்த நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தோனேசியா நாட்டின் டென்பான்சர் பாலியில் (Denpansar Bali) இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் மார்ச் 16- ஆம் தேதி முதல் VTL விமானங்கள் இயக்கப்படும். மலேசியாவின் பினாங்கு (Penang) நகரில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் மார்ச் 16- ஆம் தேதி முதல் VTL விமான சேவை வழங்கப்படும்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு (Cebu) மற்றும் டவா (Davao) ஆகிய நகரங்களில் இருந்து ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் VTL விமான சேவை வழங்கப்படும். வியட்நாம் நாட்டின் டா நாங் (Da Nang) நகரில் இருந்து மார்ச் 27- ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கு VTL விமானங்கள் இயக்கப்படும். அதேபோல், ஹனோய் (Hanoi) மற்றும் ஹோ சி மின் சிட்டி (Ho Chi Minh City) ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு மார்ச் 16- ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் VTL விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘திருச்சி, சென்னை, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- பயண அட்டவணையை வெளியிட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு என்ற https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.