இந்தியாவின் ஐந்து நகரங்களை தேர்ந்தெடுத்துள்ள சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் – இந்த நகரங்களை சிங்கப்பூர் குறி வைத்ததற்கான காரணம் இதுதான்!

public holiday Singapore 2024
Covid-19 பெருந்தொற்றினால் நாடுகளுக்கிடையேயான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூரின் சுற்றுலாத்துறை இயல்புநிலைக்கு மீண்டும் திரும்பியுள்ள நிலையில்,இந்தியா,மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதியிலிருந்து சிங்கப்பூருக்கு சாதாரண சுற்றுலாப்பயணிகள் வெளியேறுவதாக கூறப்படுகிறது.

தொற்றுப் பரவலுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வருகைபுரியும் வெளிநாட்டுப் பார்வையாளர்களின் பங்களிப்பு செய்த முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.ஆனால் தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் விருந்தளித்துள்ளது.தொற்றுநோய்க்கு முன்பு,சிங்கப்பூர் இந்தியாவிலிருந்து 1.41 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்தது.

இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் புனே, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஐந்து நகரங்களில் Roadshow நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.2024-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து பார்வையாளர்களை சிங்கப்பூருக்கு மீட்டெடுக்கப்படும் என்று வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.