வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கூட்டத்திடம் இருந்து பணத்தை பாதுகாக்க புதிய திட்டம்

banks Police freez scammers accounts
(Photo: Mothership)

மோசடியில் இருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாக்க, காவல்துறைக்கும் வங்கிகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு குறித்து உள்துறை அமைச்சர் டெஸ்மண்ட் டான் (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் பேசினார்.

மோசடிகளில் இழக்கும் பணத்தை காப்பாற்றும் நோக்கில், மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு காவல்துறையும் வங்கிகளும் ஒன்றிணைந்து செயல்படும்.

சிங்கப்பூரின் இந்த மாத வானிலை.. இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

பெரும்பாலான நேரங்களில், மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்குகள் ஒரே நாளுக்குள் முடக்கப்படலாம் என்று டான் கூறினார்.

இது ஒரு பெரிய முயற்சி என்று கூறிய அமைச்சர் டான், இதுபோன்ற பணிகள் சுமார் 14 முதல் 60 வேலை நாட்கள் வரை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

நேரத்தை மேலும் குறைக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று வங்கிகளைக் கேட்டதாக டான் கூறினார்.

இந்த ஒத்துழைப்பு முயற்சிக்கு FRONTIER திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது, இது பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் மற்றும் பயனுள்ள தீர்மானங்களை ஊக்குவிக்கிறது.

இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்றும் திரு டான் கூறினார்.

சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த மற்ற இரு ஊழியர்களின் அடையாளம்..