உடல் எடையை குறைக்க உதவுதாக விற்பனை செய்யப்படும் 4 தயாரிப்புகளில் தடைசெய்யப்பட்ட பொருள்

(PHOTO: HSA)

உடல் எடையை குறைக்க உதவும் பொருட்களாக இணையத்தில் விற்கப்படும் 4 பொருட்களில் தடைசெய்யப்பட்ட பொருளான Sibutramine இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது.

Sibutramine என்ற அந்த தடைசெய்யப்பட்ட பொருள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்துகளில் ஊழியர்கள் சிலர் கைகள், விரல்களை இழந்தனர்..!

இணையத்தில் விற்கப்படும் 4 தயாரிப்புகள்:

  • Flash Slim
  • Leedee Botanical Beverage Mix Pineapple Juice Powder with African Mango
  • Quinn S Amyera
  • Schocolite Double Chocolate Cookies Drink with Hoodia Gordinii Extract and L-Carnitine

Flash Slim உட்கொண்ட நபர்களுக்கு தூக்கமின்மை, படபடப்பு, குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதை, அனைத்து விற்பனையாளர்களும் விநியோகிப்பாளர்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் மருத்துவரை அணுகவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் லீ மீது அவதூறு வழக்கு.. S$133,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!