படகுச்சேவைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் – ஒத்திகைப் பயிற்சியைப் பார்வையிட்ட அமைச்சர் ஈஸ்வரன்

PHOTO: INCAT CROWTHER UK
சிங்கப்பூருக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையேயான படகுச் சேவை மீண்டும் தொடங்கிய நிலையில்,ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி அதிலிருந்து 82 பயணிகள் மீட்கப்படுவதைப் போன்ற ஒத்திகைப் பயிற்சி நடத்தபட்டது.
சிங்கப்பூரின் கடலோரக் காவல்படை,துறைமுக ஆணையத்தால் இந்தத் தற்காப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இந்தப் பயிற்சியைப் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

படகுச்சேவை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில்,அவை பாதுகாப்பாக செயல்படுவதை நாம் உறுதி செய்யவேண்டும்.மேலும்,பயணிகளின் தேவைகளையும் செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முந்தைய சூழலில் படகுச்சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 40 சதவீதத்தை எட்டியுள்ளது.

பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக படகு மீட்புப் பயிற்சியின் அளவு குறைக்கப்பட்டது.சென்ற ஆண்டு இதில் 50 பேர் பங்கேற்றனர்.சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பயிற்சியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம்,சுகாதார அமைச்சகம்,சிங்கப்பூர் காவல்படை,விமானப்படை மற்றும் தனியார் கப்பல் நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.