அழகுபடுத்தும் சிகிச்சைக்கு சென்ற பெண் மரணம்! – கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் கைது!

Pic: AFP/Noah Sseelam

சிங்கப்பூரில் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக சிகிச்சை பெற்ற பெண் மரணமடைந்தார்.31 வயதான லாவ் லி டிங் என்ற பெண் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி அன்று அழகுபடுத்தும் சிகிச்சைக்கு மருத்துவரிடம் சென்றுள்ளார்.

34 வயதான சான் பிங்க்யி என்ற மருத்துவர் சிகிச்சையை மேற்கொண்ட போது கவனக்குறைவினால் தவறான சிகிச்சை அளித்துள்ளார்.மருத்துவரின் அலட்சியத்தினால் சிகிச்சைக்கு பின் பெண் உயிரழந்தார்.இச்சம்பத்தைத் தொடர்ந்து காலாவதியான மருந்துகளை வைத்திருத்தல்,தவறான சிகிச்சை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் மருத்துவர் மீது சுமத்தப்பட்டன.

person holding woman nose

இந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கு நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது.சொத்துச் சந்தை முகவரான பெண் லாவ் ‘போட்டோக்ஸ்’ சிகிச்சையைப் பெற்ற பின்னர் நினைவிழந்தார்.மருத்துவர் சான், தேவையில்லாத மருந்து ஒன்றினை பெண்ணுக்கு அதிக செறிவுடனும் வேகத்துடனும் செலுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

மருந்தின் நச்சுத் தன்மையால் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில்,மருத்துவரின் கவனக்குறைவினால் பெண் உயிரிழந்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.