பிடோக் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

பிடோக் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
Photo: SCDF

 

பிப்ரவரி 13- ஆம் தேதி அதிகாலை 03.45 AM மணிக்கு சிங்கப்பூரின் பிடோக் நார்த் தெருவில் 1- ல் (Bedok North Street 1) புளோக் 202- ன் (Block 202) 11- வது தளத்தில் வீட்டிற்கு வெளியே அதாவது நடைப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

“பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது”- இஸ்ரோ அறிவிப்பு!

தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த சாங்கி தீயணைப்பு நிலையத்தின் (Changi Fire Station) தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், நடைப்பாதையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

புகையை சுவாசித்த மூன்று பேரில், இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, அந்த வீட்டில் இருந்த குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

வீட்டிற்கு வெளியே உள்ள நடைப்பாதையில் மின் சைக்கிள் சார்ஜிங்கில் (Power Assisted Bicycle- ‘PAB’) இருந்த போது, பேட்டரியில் தீ ஏற்பட்டு பரவிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிப்.28- ஆம் தேதி ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை!

மின் சாதனங்கள் தொடர்பான தீ விபத்துகளைத் தவிர்க்க, நீண்ட நேரத்திலோ அல்லது இரவு முழுவதுமோ மின்சாதனங்களை சார்ஜிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.