பெடோக்கில் சண்டையில் ஈடுபட்ட 10 நபர்கள் – 5 பேர் கைது

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் 14 முதல் 19 வயதிற்குட்பட்ட ஐந்து ஆண் இளையர்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடியது தொடர்பான சந்தேகத்திலும், தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல, 24 முதல் 37 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்கிய மேலும் ஆறு நபர்கள் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஜுராங் வெஸ்ட்டில் நிறுத்தப்பட்ட பேருந்தை தாக்காமல் இருக்க மரத்தில் மோதி தலைகீழாக புரண்ட கார்!

கடந்த மார்ச் 22 அன்று இரவு 11:45 மணியளவில், பிளாக் 542 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 3க்கு அருகில் 10க்கும் மேற்பட்டோர் தொடர்புடைய சண்டை குறித்து காவல்துறையிடம் உதவி வேண்டி பல அழைப்புகள் வந்தன.

பெடோக் காவல் பிரிவின் அதிகாரிகள் பின்னர் சம்பந்தப்பட்ட 11 நபர்களின் அடையாளத்தை கண்டறிந்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சட்டவிரோத ஒன்றுகூடலில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

போக்குவரத்து காவல்துறை அதிகாரியை வாகனத்தில் இழுத்து சென்று காயப்படுத்திய ஓட்டுநர் கைது