பெடோக் நார்த் & பெடோக் சவுத் அக்கம்பக்கம் காவல் நிலையங்கள் ஒன்றிணைப்பு – “பெடோக் NPC” ஆக உருவானது!

bedok-npc-merger
Google Maps

பெடோக் நார்த் அக்கம்பக்கம் காவல் நிலையமும் (NPC) பெடோக் சவுத் NPCயும் ஒன்றிணைந்து “பெடோக் NPC” (Bedok NPC) என்று உருவானதாக சிங்கப்பூர் காவல் படை இன்று (ஜன. 4) அறிவித்துள்ளது.

புதிய பெடோக் NPC, அதிகாரிகளின் பணியிடல் தன்மையை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குளுகுளு குளுமையுடன் தொடங்கிய புத்தாண்டு… வெப்பநிலை 23°C குறையும்!

மேலும், பெரிய மற்றும் மிகவும் சிக்கலான வழக்குகளுக்கு சிறப்பாக விரைந்து செயல்பட காவல்துறைக்கு இது உதவும்.

அதோடு மட்டுமல்லாமல், காவல்துறையின் தொடர்புகளையும், அவர்களின் சமூகத்துடனான ஈடுபாட்டையும் இது வலுப்படுத்துகிறது.

இந்த புதிய பெடோக் NPC, 30 பெடோக் நார்த் ரோட்டில் அமைந்துள்ள பெடோக் நார்த் NPCயின் அதே வளாகத்தில் செயல்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பெடோக் சவுத் NPC, 20 சாய் சீ டிரைவில் அமைந்துள்ளது, இது பெடோக் சவுத் அக்கம்பக்கம் காவல் போஸ்ட் ஆக (NPP) மாற்றப்படும்.

வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுனரை காணவில்லை – போலீசார் விசாரணை