அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Photo:SCDF

 

சிங்கப்பூரில் உள்ள பெடோக் ரிசர்வாயர் சாலையில் (Bedok Reservoir Road) அமைந்துள்ள புளோக் 618 அடுக்குமாடி குடியிருப்பில், இன்று (ஜூலை 21) அதிகாலை 03.40 AM மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் விரைந்து வந்தனர்.

லக்கி பிளாசாவில் S$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இருவர்

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் (7th Floor) உள்ள வீட்டில் தீ கொளுந்து விட்டு எரிந்ததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக அங்கு சென்று, வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்டத் தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து, முழுவதுமாக அணைத்தனர். எனினும், அந்த அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து இரண்டு பேர் தாமாகவே வெளியேறினர். இதில், சிகிச்சைக்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 90 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தியரை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி கோரும் சிங்கப்பூர் போலீசார்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், படுக்கையறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், படுக்கையறையில் ஏற்பட்ட தீ வீட்டின் வரவேற்பறை வரைக்கும் பரவியதாக தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர்.