சிங்கப்பூரில் 48 மணிநேரத்தில் உங்களால் என்ன செய்ய முடியும்?

Singapore Indian tourists Chennai
Singapore

சிங்கப்பூரில் 48 மணிநேரம் செலவழிப்பது அந்நாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிடுவதற்குப் போதாது.  எனினும் 48 மணி நேரத்தில் காணக்கூடிய விஷயங்களும் ஏராளமாக உள்ளன. கடைத் தெருவிற்குச் செல்வதிலிருந்து வேடிக்கை பார்க்கச் செல்லும் வரை, உணவிலிருந்து விளையாட்டு வரை, சிங்கப்பூரில் அனைத்துமே கிடைக்கும். கிழக்கு  மேற்கின் அற்புதமான கலவையான சிங்கப்பூர், கலாச்சாரங்கள் உருகும் சங்கமம். சிங்கப்பூரில் நிறைய அனுபவிக்கலாம். சிங்கப்பூரில் 48 மணி நேரத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள் 1

சைனாடவுன்

Chinatown-48-hours-in-Singapore

காலை நேரத்தில் சைனாடவுனுக்குச் சென்று உங்களுக்கு இருக்கும் பயணச்சோர்வை (ஜெட்லாக்) தூக்கியெறியுங்கள். அந்த நகரின் மாபெரும் வரலாற்று மாவட்டமான இந்த சீனபாரம்பரிய நகரத்தில் மறைந்துள்ள மகிழ்ச்சிகளைக் கண்டறியுங்கள். இங்கு பாரம்பரியமும் நவீனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. தெருவோர வியாபாரிகள் நிறைந்த சந்துகளிலிருந்து குடும்ப ரீதியாக நடத்தப்படும் நிறுவனங்கள் வரை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளன. மதுபான அருந்தகத்திலிருந்து துணிக்கடை வரை அனைத்து விதமான கடைகளும் உள்ளன. சைனாடவுனில்தான் புத்தரின் பல் வைக்கப்பட்ட கோவில் உள்ளது. இங்கு ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. உங்களுக்கு செலவிட நேரம் கிடைத்தால்  இங்குள்ள பிரம்மாண்டமான ஸ்தூபியை நீங்கள் காணலாம். இது 320 கிலோ எடை கொண்டது.

சிங்கப்பூர் நதியில் உல்லாசப் படகுப் பயணம்

சைனாடவுனுக்குப் பிறகு சிங்கப்பூர் நதியில் உல்லாசப் படகுப் பயணம் செல்ல போட் க்வேவிற்கு உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நீங்கள் படகுப் பயணம் செய்யும்போதே அங்குள்ள காலனியாதிக்க கட்டிடங்களையும் வானுயர்ந்த நவீன கட்டிடங்களையும் ஒரு சேர காணலாம். சிங்கப்பூரின் பிரம்மாண்டமான பாலங்களைக் காணுங்கள். மெர்லியான் மற்றும் எஸ்ப்ளெனேட் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கண்டுகளியுங்கள்.

மெர்லியன் பூங்கா

Merlion-Park-48-hours-in-Singapore

பிரம்மாண்டமான மெர்லியன் சிலையானது சிங்கப்பூரின் பெருமை. 9 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த புராண விலங்கிற்கு சிங்கத்தின் தலையும் மீனின் உடலும் உள்ளது. சிங்கப்பூரின் வர்த்தகச் சின்னமான இது, மீன்பிடி கிராமமாக இருந்த அந்த நாட்டின் அடக்கமான பாரம்பரியத்தை உணர்த்துகிறது.

தி எஸ்ப்ளனேட்

மதிய உணவிற்கு ஓய்வெடுக்க தி எஸ்ப்ளெனேட் வாருங்கள். நீர்தளத்தில் உள்ள  கம்பீரமான கலை நிகழ்ச்சி இடம். முக்கோண வடிவிலான கண்ணாடி பொருட்களும் சூரிய நிழல் மறைப்பவைகளும் (சன் ஷேட்ஸ்) கொண்டு இந்தக் கட்டிடக்கலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்முனைக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு 600 சிங்கப்பூர் டாலர்கள் செலவானது. இந்த பல்சுவை அங்காடியில் பல்வேறு உணவகங்களும்  காபி அருந்தகங்களும் உள்ளன. நீங்கள் இங்கு அமர்ந்து நன்கு உணவு உண்டுகொண்டே இந்த நகரின் ஆரவாரங்களையும் காணலாம்.

கார்டன்ஸ் பை தி பே

Gardens-by-the-bay-48-hours-in-singapore

எஸ்ப்ளெனேடுக்கு அருகில் 101 ஹெக்டேர் பரப்பளவில் இந்த இயற்கைப் பூங்காவான கார்டன்ஸ் பை தி பே உள்ளது. மரினா பே ஸ்கைலைனின் ஆச்சரியமூட்டும் காட்சிகளுடன் இது அமைந்துள்ளது. ஒரு பெரிய பூமாடத்தில் ஏழு வெவ்வேறு விதமான பூங்காக்கள் உள்ளன. ஒரு ஆலிவ் தோப்பு, வெப்பக்காட்டு மலைப்பிராந்தியங்கள் நிறைந்த மேக்காடு, ஆர்க்கிடுகள், காளான்கள், சூப்பர் மரத்தோப்புகள், மரத்தைப் போன்ற உயரமான அமைப்புகள்  ஆகியவை இங்கு உள்ளன. இவை அனைத்தும் இங்குள்ள இசை மற்றும் ஒளி நிகழ்ச்சியான ஓசிபிசி பூங்காவின் ராப்சோடியுடன் இணைந்துள்ளது. இங்குள்ள பசுமையான தோட்டத்தில் உலாவுங்கள் அல்லது அமர்ந்து ஓய்வெடுங்கள் அல்லது கார்டன்ஸ் பை தி பேவில் உள்ள அழகிய மேடைகளை அனுபவியுங்கள்.

க்ளார்க் க்வே

நகரக் காட்சிகளை நாள் முழுவதும் கண்டு ரசித்த பிறகு, உங்களது ஓய்வை ஒரு மதுபான அருந்தகத்திலோ அல்லது உணவகத்திலோ கழிக்க க்ளார்க் க்வேவிற்கு வரவும். இது செயல்பாடுகளால் உத்வேகப்பட்டுள்ளது.  அதிகாலையின் வைகறைப் பொழுதில் பார்ட்டி உள்ளிட்ட கொண்டாட்டங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால், மக்களைக் காண்பதற்கு க்ளார்க் க்வே அற்புதமான இடம். உங்களைச் சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அனுபவியுங்கள்.

நாள் 2

சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காக்கள்

Singapore-botanic-gardens-48-hours-in-singapore

சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காக்கள், யுனெஸ்கோவின் பாரம்பரிய ஸ்தலம் ஆகும். உங்களது இரண்டாம் நாள் பயணத்தை இந்த பூங்காவிலிருந்து துவங்குங்கள். பசுமையின் சரணாலயமான இந்த பூங்காவில் பொன்சாய் பூங்கா, 1000 தாவர மாதிரிகளைக் காட்சிப்படுத்திய தேசிய ஆர்க்கிட் பூங்கா, இஞ்சி பூங்கா, அமேசான் இராட்சத  நீர் அல்லிகளின் குளம், வெப்பகால மழைக்காடு, 400 மருத்துவத் தாவரங்கள் கொண்ட மருத்துவப்பூங்கா ஆகியவை உள்ளன.

ஆர்ச்சர்ட்  சாலை

இந்த நகரின் கடைத்தெருவான ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள சில்லறை சிகிச்சையகத்தில் சற்று நேரம் கழியுங்கள். இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சில்லறை வியாபாரிகள் உள்ளனர்.  உயர்ந்த பிரம்மாண்டமான பிராண்டட் கடைகளும் உள்ளன.  இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 25 பேரங்காடிகள் (மால்) உள்ளன.  இங்கு ஆடையிலிருந்து மின்னணு உபகரணம் வரை அனைத்தையும் இங்கு காணலாம். ஆர்ச்சர்ட் சாலையில்  பல்வேறு உணவகங்கள் உள்ளன. காபி அருந்த பல்வேறு காபி அருந்தகங்களும் உள்ளன.  எனவே கடைக்குச் செல்வதைத் தொடருங்கள்.

லிட்டில் இந்தியா

Little-India-48-hours-in-singapore

ஆர்ச்சர்ட் சாலையில் நீங்கள் முழுவதும் நிறைவாக வாங்கிய பிறகு, மதிய உணவிற்கு லிட்டில் இந்தியாவிற்குச் செல்லவும். நீங்கள் இங்கு வந்த பிறகு நீங்கள் வெளிநாட்டிற்கு வந்திருக்கிறீர்கள் என்ற உணர்வே இருக்காது. இது மதிய உணவிற்கான அற்புதமான இடம். இங்கு பல இந்திய உணவகங்கள் உள்ளன. தோசையிலிருந்து தந்தூரி சிக்கன் வரை பிராந்திய இந்திய உணவு முறைகள் உள்ளன. உங்களது மதிய உணவிற்குப் பிறகு, கடைக்குச் செல்லும் விருப்பமுடையவர்கள் முஸ்தபா மையத்திற்குச் செல்லாம். இங்கு மலிவாக பொருட்களை வாங்கலாம். பக்தர்கள் லிட்டில் இந்தியாவில் உள்ள பல்வேறு இந்து கோவில்களுக்குச் செல்லலாம்.

சிங்கப்பூர் ஃப்ளையர்

சிங்கப்பூர் ஃப்ளையரில் உள்ள சூரிய அஸ்தமன வளைவிற்கு வரவும்.  இது உலகிலேயே மிகவும் உயரமான சக்கர இராட்டினம் ஆகும். இதில் 28 குளிர்சாதன வசதி மிக்க பெட்டிகள் உள்ளன. இந்த நகரின் அழகையும் அதன் முக்கிய ஸ்தலங்களையும் 360 டிகிரி கோணத்தில் காண உதவுகிறது. இந்த ஃப்ளையரில் 30 நிமிடங்கள் பயணம் செய்தால் உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும். இந்த நகரத்தின் கடைசி இரவை சந்தோஷமாகக் கழிக்கலாம்.

க்ளப் தெரு

சைனாடவுனிற்கு அருகில் கேளிக்கையை அனுபவிக்க உங்களது வழியை க்ளப் தெருவிற்கு அருகில் அமைக்கவும். மிகவும் பிரபலமான சிங்கப்பூர் இரவு வாழ்க்கையை அனுபவிக்கும் இடம். மது பான அருந்தகங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள பார்களிலும் ஓய்வெடுக்கும் இடங்களிலும் நேரடியான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

(Source – makemytrip)