சிங்கப்பூரில் பரதநாட்டியத்தில் அரங்கேறினார் சாய் தேஜஸ்வி – குவியும் பாராட்டுக்கள் !

bharathanatyam sai tejaswi

ஆகஸ்ட் 13ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய் தேஜஸ்வி, சிங்கப்பூரில் பரதநாட்டியத்தில் அரங்கேறினார். அவரின் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவரின் பாரம்பரிய நடனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஐந்து வயதிலிருந்தே நடனம் பயின்று வரும் சாய் தேஜஸ்வி, பல சர்வதேச நடன நிகழ்ச்சிகளில் விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி 2019 இல் தியாகய்யா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாட்டியசிரோமணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களாக பங்கு பெற்றவர்கள்:-

  • பத்மஸ்ரீ விருது பெற்ற குச்சிப்புடி குருவாரியலு ஸ்ரீமதி. பத்மஜா ரெட்டி சாய் தேஜஸ்வி
  • சிங்கப்பூர் இந்திய நுண்கலைப் பொருளாளர் ஸ்ரீ வெங்கட் பத்மநாதன்
  • கலாக்ஷேத்ரா குரு சீதாராமன் மற்றும் டாக்டர் எம்.எஸ். ஸ்ரீலட்சுமி
  • ஸ்ரீ சம்ஸ்க்ருதிகா கலாசாரதி தலைவர் ஸ்ரீ கவுடுரு ரத்னகுமார்
  • சமூக ஆர்வலர் ஸ்ரீமதி. சுனிதா ரெட்டி

 

இந்நிகழ்ச்சியை சாய் தேஜஸ்வியின் பெற்றோர்களான குடிதேனி வீரபத்ரய்யா மற்றும் பவனி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அவரது பாட்டி குடிதேனி கோவிந்தம்மாவும் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். மேலும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிப்பதாகவும், இந்திய கலைகளுக்கு பெருமை சேர்ப்பதாகவும் இந்த இதயப்பூர்வமான நிகழ்வை கூட்டத்தினர் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.