இனி சிங்கப்பூரிலும் இந்தியாவின் மின்கட்டணச் சேவை..!

BHIM-UPI service in Singapore

இந்தியாவின் BHIM-UPI மின்கட்டணச் சேவையை இனி சிங்கப்பூரிலும் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு ஜாவெட் அஷ்ரஃப், சிங்கப்பூர் Fintech விழாவில் அதன் முன்னோட்டத்தைத் தொடக்கி வைத்தார். சிங்கப்பூரில் BHIM-UPI அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BHIM செயலியை வைத்திருப்பவர்கள் NETS கட்டண முனையங்களில் உள்ள QR குறியீட்டை scan செய்யும்போது, அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை கழிக்கப்படும்.

இது இந்தியாவின் தேசியக் கட்டண நிறுவனம் (National Payments Corporation) சிங்கப்பூரின் NETS நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிதித் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது.