சிங்கப்பூர் மாலுக்குள் நுழைந்த ராட்சத பறவை; வியந்து பார்த்த மக்கள்!

Stomp

Peninsula Plazaவிற்குள் கடந்த புதன் கிழமை (ஜூலை 20) காலை நேரத்தில் தெரியாத்தனமாக உள்ளே நுழைந்து மாட்டிக்கொண்ட மிகப்பெரிய nightjar பறவை பத்திரமாக மீட்கப்பட்டது.

அன்று காலை 9.30 மணியளவில் மாலில் இந்த பறவையைக் கண்டதாக ஸ்டாம்ப் வாசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலை சரிவு – முழு ரிப்போர்ட்

அதனை தொடர்ந்து, அவர் விலங்கு அக்கறை ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பை (Acres) அழைத்ததாகவும் கூறினார்.

இரவில் விழித்திருந்து பகலில் தூங்கும் பெரிய வால் கொண்ட நைட்ஜார் பறவையை, துப்புரவு ஊழியர் காலை 6 மணிக்குப் பார்த்துள்ளார். அது இரவு நேரத்தில் சிக்கி இருக்கும் என அவர் நம்புகிறார்.

“அவ்வளவு பெரிய பறவை மாலுக்குள் நுழைந்ததும், இது போன்ற காட்சியும் இதுவே முதல் முறை” என்று வாசகர் கூறினார்.

“இதனால் உற்சாகமடைந்த மாலில் இருந்த அனைவரும், பறவை கட்டிடத்தை விட்டு வெளியே வர உதவ முயன்றனர்” என்றார்.

சிங்கப்பூர் முதலாளி கொடுத்த சம்பள பாக்கி ரூ.3 லட்சம்… போதையில் தொலைத்த ஊழியர் – போலீசில் ஒப்படைத்த பழம் விற்கும் பாட்டி: குவியும் பாராட்டு