சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய லாலு பிரசாத் யாதவ்!

Photo: Lalu Prasad Yadav Official Twitter Page

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக கோளாறு காரணமாக டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும், லாலுவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைச் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இண்டிகோ விமான என்ஜினில் தீ…. அவசர அவசரமாக பயணிகள் வெளியேற்றம்!

இருப்பினும், லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டு தீவன ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தினால், அவரை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல முடியாத சூழலில், அவரது தரப்பு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் லாலு பிரசாத் யாதவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவை அவரது குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாலுவுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

டெல்லியில் உள்ள மகள் மிசா பாரதி இல்லத்தில் தங்கி லாலு பிரசாத் யாதவ் ஓய்வெடுத்து வருகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலுவின் மகள் மிசா பாரதி, “லாலு பிரசாத் யாதவுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த பரிசோதனைகளை இந்தியாவிலே எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். பின்னர், பரிசோதனை முடிவுகளை சிங்கப்பூர் மருத்துவர்களுக்கு அனுப்பி வைப்போம். இப்போதைக்கு லாலு பீகார் செல்லமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.