இனி சிங்கப்பூரில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படாது! மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றம் என்ன?

migrant worker dead Sungei Tengah
Migrant worker found dead at Sungei Tengah Lodge

எதிர்வாரும் மே 29 ஆம் தேதி­யி­லி­ருந்து அச்சிடப்பட்ட வடிவில், பிறப்பு, இறப்பு சான்­றி­தழ்­கள் வழங்­கப்­ப­ட­மாட்டாது. பதி­வு­ செய்­யும் முறை­களை எளி­மைப்­ப­டுத்த இது போன்ற ­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஐ.சி. ஏ தெரி­வித்­துள்ளது.

சான்­றி­தழ்­கள் அச்சிடப்பட்ட வடிவில் வழங்கப்படுவதற்கு பதி­லாக டிஜிட்டல் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­படும்.  இனி நேரடி­யா­கச் சென்று பிறப்பு, இறப்­புச் சான்­றி­தழ்­க­ளுக்கு விண்­ணப்­பம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இம்­மா­தம் 29ஆம் தேதி முதல் ‘LIFESG’ என்ற செயலி அல்­லது இணை­யத்­த­ளம் வாயி­லாக குழந்­தை­களின் பிறப்பைப் பதி­வு­செய்­ய­லாம். பிறகு டிஜிட்டல் பிறப்புச் சான்­றி­த­ழைப் பதி­விறக்­கம் செய்­யு­மாறு பெற்­றோ­ருக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் அனுப்­பப்­படும்.

தக­வல் வந்த பிறகு 90 நாள்­களுக்­குள் பெற்­றோர் சான்­றி­த­ழைப் பதி­வி­றக்­கம் செய்­ய­லாம். சான்­றி­த­ழை கை­பேசி போன்ற சாத­னங்­களில் வைத்­துக்­கொள்­ள­லாம்.

தற்­போதைய சூழலில் குழந்­தை­கள் பிறந்த மருத்­து­வ­மனை அல்­லது குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தில் பிறப்பு, இறப்பு பதி­வு­செய்­யவேண்டும் என்ற நிலை உள்ளது.

பிறப்பு பதிவை போலவே ஒரு­வ­ரின் மர­ணத்­தைப் பதி­வு­செய்­யும் முறை­யை­யும் எளி­மைப்­ப­டுத்தி வரு­கிறது. மே 29ஆம் தேதி­யி­லி­ருந்து யாரே­னும் மர­ண­மடைந்­தால் மருத்­து­வர் ஒரு­வர் இணை­யம்­வழி இறப்­புச் சான்­றி­தழை வழங்­கு­வார். இது, தானா­கவே குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் பதி­வ­கத்­தில் சேர்க்கப்படும்.

இறப்­புச் சான்­றி­த­ழின் எண்ணை அந்த மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து பெற்றுக்­கொண்ட பிறகு, சான்­றி­தழை ‘மை லெகசி’ எனும் இணை­யத்­தளத்­தி­லி­ருந்து பதி­வி­றக்­கம் செய்து­கொள்­ள­லாம். இறப்பைப் பதிவுசெய்ய கட்டணம் கிடையாது.

சான்­றி­தழ்­க­ளி­ல் உள்ள ‘QR’ குறி­யீட்­டைக் கொண்டு அர­சாங்க அமைப்­பு­களும் தனி­யார் நிறு­வ­னங்­களும் அவற்­றின் நம்­ப­கத்­தன்­மையை உறு­திப்­படுத்­திக்­கொ­ள்ள­லாம்.