ஊழியர்களுக்கு அடுத்தகட்ட தடுப்பூசி… பணிகள் விறுவிறு

Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் அடுத்தகட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

அதாவது சுகாதார ஊழியர்களுக்கு இரு செயல்திறன் கொண்ட தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

போதைப்பொருளுடன் சிக்கிய பள்ளி மாணவர்கள் – கடத்தல் சந்தேகத்தில் 5 பேர் கைது

சிங்கப்பூரில் தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில் அவர்களை குழுவாக பிரித்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படுகின்றன.

தற்போது சிங்கப்பூரில் XBB வகை கிருமி பரவல் காரணமாக, Fullerton Health குழுமத்தின் 30 மருந்தகங்களில் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதே போல சில மருந்தகங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்வதாகவும், செயல்பாடுகள் பாதிக்காதவாறு அங்குள்ள ஊழியர்களுக்கு தடுப்பூசி விரைவாக போடப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு நாட்களாக 13 வயது சிறுமியை காணவில்லை