சிங்கப்பூரில் அக்டோபர் 14 முதல் சிறப்புவாய்ந்த bivalent தடுப்பூசி!

Pic: Reuters

சிங்கப்பூரில் தற்போது bivalent Moderna/Spikevax தடுப்பூசிகளை வரும் அக்டோபர் 14 முதல் போட்டுக்கொள்ள முடியும்.

முன்பு அக்டோபர் 17 ஆம் தேதி அன்று தடுப்புசி கிடைக்கும் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்தது. ஆனால், அதற்கு முந்தைய தேதிலேயே நீங்கள் அதனை போட்டுக்கொள்ள முடியும்.

சிங்கப்பூரில் உயரும் வெப்பநிலை: புதிய தொற்றுநோய் ஏற்படும் அபாயம்..!

XBB Omicron துணை வகை நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், அதை ஆரம்பத்திலேயே கட்டப்படுவதற்கு இது சிறந்தது எனவும் கூறப்படுகிறது.

Bivalent Moderna/Spikevax தடுப்பூசி அதே அசல் தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இது கோவிட்-19 கிருமியை மட்டும் குறிவைக்காமல், Omicron வகை கிருமியையும் இந்த தடுப்பூசி குறிவைக்கிறது.

அதாவது புதிய வகை கோவிட்-19 வகை கிருமிகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை இந்த வகை தடுப்பூசி வழங்கும்.

தன் சொந்த தந்தையையே கொன்ற 19 வயது மகன்… சந்தேகத்தின்பேரில் கைது செய்த போலீஸ்