“வந்துட்டேன்னு சொல்லு, சிங்கப்பூருக்கு திரும்பி வந்துட்டேன் சொல்லு ” – அரியவகை பறவையின் காட்சிகளை படம் பிடித்த புகைப்படக் கலைஞர்கள்

black and red broadbill bird reappears in singapore pulau ubin shore

சிங்கப்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பறவை கண்காணிப்பாளர்கள் சமீபத்தில் தனித்துவமான நிறங்களைக் கொண்ட இறகுகளுடன் கடற்கரையில் நின்றுகொண்டிருந்த பறவையை படம் பிடித்தனர். Black and red broadbill வகை பறவைகள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படலாம். ஆனால் சிங்கப்பூரில் இதை காண்பது மிகவும் அரிது.

இந்த இன பறவையானது முன்பு சிங்கப்பூரில் வசிக்கும் பறவையாக இருந்தது.எனினும் 1980-களில் சிங்கப்பூரில் இது அழிந்து விட்டதாக கூறப்பட்டது.மீண்டும் 2004-ல் காணப்பட்டது. தெற்கு ஜோகூரிலிருந்து வந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. இந்த இனத்தைச் சேர்ந்த பறவைகள் மிகவும் அரிதானவை மற்றும் இனப்பெருக்கம் செய்யாத உயிரினம் என்று சிங்கப்பூர் பறவைகள் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

அரிய இனத்தைச் சேர்ந்த பார்வையாளர் சிங்கப்பூரின் Pulau Ubin கடற்கரை பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த புகைப்பட கலைஞர்கள் தேவையான உபகரணங்களுடன் உடனடியாக கடலோர தீவிற்கு விரைந்தனர்.

மே 5ஆம் தேதி, மதியம் 2 மணி அளவில் அங்கு வந்த Chris Ang, சதுப்பு நில காடுகளுக்குள் பறவையின் அசைவுகளை படம் பிடிக்கத் தொடங்கினார். அங்கு அவர் செலவழித்த ஒன்றரை மணி நேரத்தில் தெளிவான படங்களை எடுக்க முடிந்தது. பறவையின் நிறம் மிக தனித்துவமாகவும், அது கிட்டத்தட்ட ஒரு பொம்மை போலவும் இருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரின் பார்வையாளராக வந்த பறவை பறந்து செல்லும் காட்சிகளையும், விதைகளை கொத்தி தின்னும் காட்சிகளையும் புகைப்படக் கலைஞர் Ang படம்பிடித்துள்ளார். பறவையின் உடலிலுள்ள வண்ணங்கள் மாற்றத்திற்கான புத்துணர்ச்சியாக இருப்பதாக மற்றொரு புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். பறவையின் புகைப்படத்தை பார்க்கும் போது மனதில் ஒரு அலாதியான நிம்மதி பூக்கத்தான் செய்கிறது .