தெம்பனிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!

Photo: Google Maps

ஏப்ரல் 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.35 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள தெம்பனிஸ் தெரு 62-ல் உள்ள பிளாக் 645பி (Block 645B Tampines Street 62) என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 13ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் (Singapore Civil Defence Force- ‘SCDF’) மற்றும் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்கு சென்ற புதுக்கோட்டை இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

இதையடுத்து, தீயணைப்புக் கருவிகள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், 13ஆவது மாடிக்கு சென்று தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நுழைந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்த ஐந்து பேர் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் சுயமாக வெளியேறியுள்ளனர். அதேபோல், அக்கம், பக்கத்தினரும் வெளியேறியுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மற்றும் புகையை சுவாசித்த ஐந்து பேரில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நான்கு பேரும், கே.கே.மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானிலே உயிரிழந்த பயணி!

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டின் படுக்கையறையில் மின்சார சாதனங்களில் தீ பற்றியதாகவும், அது மளமளவென வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.