நேரா அங்கதான் மோதி பஞ்சராகிருக்கு ! – வந்த கொஞ்ச நாள்லயே இப்படியா ஆகணும்!

bluesg-opel-corsa-e-tampines-pc- mothership.sg
சிங்கப்பூரின் சாலைகளில் பயணிக்கத் தொடங்கிய 5 வாரங்களிலேயே மின்சார வாகனமான BlueSG Opel Corsa ரக கார் விபத்துக்குள்ளானது.டிசம்பர் 2, 2022 அன்று Tampines Avenue 9 இல் விபத்துக்குள்ளான வாகனம் சேதமடைந்து காணப்படுகிறது.
அக்டோபர் 27 அன்று முதலாவது BlueSG Opel Corsa மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.கார் விபத்துக்குள்ளான காணொளி மற்றும் புகைப்படங்கள் காரின் பயனர்களுக்கான முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.
விபத்தில் வேறு எந்த வாகனமும் சிக்கவில்லை.சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது கார் மோதியது காணொளியில் பதிவாகியுள்ளது.விபத்தை நேரில் பார்த்த நபர் ,காருக்குள் ஒரு குழந்தையுடன் இரண்டு பேர் இருந்ததாக தெரிவித்தார்.

Bluesg இன் விதிமுறைகளின் படி, காருக்கு ஏற்படும் சொந்த சேதம், டிரைவரின் வயதைப் பொறுத்து S$5,000 அல்லது S$8,000 ஆக இருக்கும்.காரின் முன்பக்க டயர் பஞ்சராகி உள்ளது.மேலும்,அதன் ஓட்டுனர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருந்தார்.