நல்லவேளை! அந்தப் பையனுக்கு ஒன்னும் ஆகல! – BMW காருக்கு வந்த சோதனைய பாருங்க!

BMW-Idle-boy-crash
என்னதான் விலையுயர்ந்த BMW காரா இருந்தாலும் வாகன இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு கடைக்கு முன்பு பார்க்கிங் செய்ய வேண்டும்.இல்லையெனில் அது பலத்த காயத்திற்கு வழிவகுக்கும்.இது போல ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று செராங்கூன் பகுதியில் காருக்குள் தனது 9 வயது மகனை விட்டுச்சென்ற தாய் அங்கு நடந்த சிறிய விபத்தில் பலத்த காயங்கள் தவிர்க்கப்பட்ட பிறகு லேசான நிம்மதியை அடைந்தார்.

எஸ்ஜி ரோடு விஜிலன்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு இடுகையின் படி, BMW SUV காரின் ட்ரைவர் என்ஜினை செயலிழக்கச் செய்ததால் எதிரே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.அந்தப் பெண்ணின் 9 வயது மகன் செயலற்ற காரில் இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது காரினுள் இருந்த சிறுவன் துணிச்சலாக வாகனத்தை இயக்க முடிவு செய்ததாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“அதிர்ஷ்டவசமாக இரண்டு கார்களுக்கும் இடையில் யாருமில்லை..யாருக்கும் காயம் ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி” என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.ஆனால் துரதிர்ஷடவசமாக BMW-வின் bonnet, grilles மற்றும் Fender போன்றவை சேதம் அடைந்தது.காரில் ஏற்பட்ட சேதத்தின் புகைப்படமும் இடுகையில் பதிவிடப்பட்டுள்ளது.

சட்டப்படி,மைனர் வயதினரை செயலற்ற வாகனத்தில் விட்டுச் செல்வதால் ஏற்படும் அபாயங்களைத் தவிர,வாகனம் நின்ற நிலையில் என்ஜினை இயங்க அனுமதிப்பதும் சட்டவிரோதமானதாகும்.சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து நிலைமைகளைத் தவிர வேறு காரணங்களுக்காக வாகனத்தை செயலிழக்க வைப்பது குற்றமாகக் கருதப்படுகிறது.
இது போன்ற குற்றங்களைக் களைவதன் மூலம் மாசுபாட்டையும்,எரிபொருள் வீணாவதையும் தடுக்கலாம்.தங்கள் வாகன எஞ்சின்களை செயலிழக்க வைக்கும் உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் குற்றத்திற்கு S$2,000 மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்