இப்படியும் விமானத்தை இயக்கலாமா? – மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பறக்கும் விமானங்கள்

boeing from malaysia to singapore kula lambur with stable fuel

எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மலேசியா ஏர்லைன்ஸ் நிலையான விமான எரிபொருளை உபயோகப்படுத்தும் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளது.இந்த நிலையான விமான எரிபொருள் தற்போது உலக நாடுகள் எதிர்கொள்ளும் காலநிலை நெருக்கடிக்கு எதிரான பயணங்களில் ஒன்றாகும்.

மலேசிய விமான நிறுவனங்களின் விமானங்களான போயிங் 737-800 விமானத்தில் பிரத்தியேக நிலையான எரிபொருள் உபயோகப்படுத்தப்படும்.இந்த விமானங்களில் தோராயமாக 38 விழுக்காடு நிலையான எரிபொருள் மற்றும் வழக்கமான விமான எரிபொருளின் கலவையை பயன்படுத்தி இயக்கப்படும்.

வழக்கமான விமான எரிபொருள் உடன் ஒப்பிடும்போது இந்த நிலையான விமான எரிபொருள் 100 சதவீதம் மீண்டும் புதுப்பிக்க கூடிய கழிவுகள் மற்றும் எச்ச மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் 80 விழுக்காடு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

வழக்கமான விமான எரிபொருளுடன் இந்த நிலையான எரிபொருளின் ரசாயன அமைப்பு ஒத்திருக்கிறது. இந்த நிலையான எரிபொருள் விலங்குகள் ,தாவரங்கள்,கழிவு எண்ணெய்கள், வணிகங்களிலிருந்து வெளியேற்றப்படும் காகிதம் மற்றும் உணவு குப்பைகள் போன்ற திடக்கழிவுகளிலிருந்து உருவாக்கப்படலாம்.

மலேசியன் ஏர்லைன்ஸ் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் போது, ​​”SAF2022″ என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி, பயணிகள் தங்களுடைய நிலையான விமான எரிபொருள் விமான டிக்கெட்டுகளில் 15 சதவீத தள்ளுபடியை ஜூன் 4 வரை அனுபவிக்கலாம்

MH606 சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்பட்டு, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை 3:40 மணிக்கு வந்தடையும்