கொதிக்கும் எண்ணெய்யை மனைவி மீது ஊற்றிய கணவர்! – மீன் பொறிப்பதற்காக சட்டியில் கொதித்த எண்ணெய்!

Wife husband divorce oil fight
வீட்டில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது,கணவர் கொதிக்கும் எண்ணெய்யை மனைவிமீது ஊற்றினார்.53 வயதான பெண்ணுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன.வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அலறிய பெண்ணை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரில் இடது கைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.காயங்கள் ஆற அவருக்கு ஒன்றரை மாதம் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.மேலும்,அவர்கள் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
சைமன் சியாங் என்ற 54 வயது நபருக்கு 15 மாதம்,இரண்டு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் சியாங்கின் வீட்டுக்கு அவரது நண்பர் $10 கடன் தொடர்பாக பேச சென்றிருந்தார்.அப்போது நடந்த வாக்குவாதத்தில் சியாங் அவரது நண்பரை சரமாரியாகத் தாக்கிவிட்டு ஓடினார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் சியாங்கின் மனைவியையும் அவ்வாறு தாக்கினார்.கணவரிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வெளியே சென்று காவல்துறையினரிடம் மனைவி புகாரளித்தார்.மறுநாள் வீடுதிரும்பிய மனைவியிடம் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிப்போக ஆத்திரமடைந்த சியாங் சமையலறையில் மீன் பொறிப்பதற்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றினார்.எண்ணெயில் கால் வழுக்கி மனைவி கீழே விழுந்தார்.சியாங் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சத்தத்தைக் கேட்ட பக்கத்துவீட்டுக்காரர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.