சிங்கப்பூர் கண்டனம்! – வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியவரின் நிலை என்ன?

bomb blast indonesia

இந்தோனேசியாவில் நேற்று (டிச 7) குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது.இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தலைநகர் பண்டூங்கில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தனர்.பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காவல்நிலையத்தில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியவரும் மற்றொருவரும் பலியாகினர்.இந்தத் தாக்குதலில் சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளான காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெடிகுண்டுத் தாக்குதல் குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முனைப்பில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தாக்குதலில் காயம்டைந்தவார்ல் விரைவில் குணமடைய விரும்புவதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.