Boon Lay Place Food Village இரண்டு வாரங்களுக்கு மூடல் – MOH

Boon Lay Place closure
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள Boon Lay Place Food Village உணவு நிலையத்தில் 7 பேருக்கு COVID19 கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த உணவு நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

Boon Lay Place-ல் உள்ள உணவு நிலையத்தில் தற்போது சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை Boon Lay Place Food Village மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் – மனிதவள அமைச்சகம்.!

உணவு நிலையத்தில் வேலை செய்தவர்கள் அல்லது அங்கு சென்று வந்தவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Boon Lay Place Food Village உணவு நிலையத்திற்கு இந்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்றுவந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவச கிருமித்தொற்றுப் பரிசோதனை வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத்தில் ஏற்பட்ட கிருமிப்பரவல் குறித்து சுகாதார அமைச்சகம் மேற்கொண்ட விசாரணையில், புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பற்றி தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்..மேலும் இரண்டு சந்தைகள் மூடல்..!