5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பூஸ்டர் டோஸ் – ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடக்கம் !

Vaccination booster dose

முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு, ஐந்து மாதங்களுக்குப் பிறகு, Pfizer-BioNTech/Comirnaty தடுப்பூசியின் ஒரு பூஸ்டர் டோஸைப் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது கடுமையான நோய்த்தாக்கதிற்கு எதிராக பாதுகாப்பாக இருப்பதற்கும் அடுத்த கோவிட் அலைக்கு நம்மை தயார் செய்வதற்கும் தேவையானது என்று பல்லமைச்சகப் பணிக்குழு (MTF) ஆகஸ்ட் 24 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

COVID-19 தடுப்பூசி குறித்த நிபுணர் குழு EC19Vயின் பரிந்துரையினை சுகாதார அமைச்சகம் முழுமையாக ஏற்றுள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆண்டின் நான்காம் காலாண்டில் தடுப்பூசிகள் போடத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதற்காக தீவு முழுவதும் ஐந்து பிரத்யேக தடுப்பூசி மையங்கள் (VACCINATION CENTERS) அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி குறித்த விவரங்கள் பின்னர் MTF ஆல் அறிவிக்கப்படும்.