எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வு: சொந்த நாடு திரும்பிய “சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலேசிய ஊழியர்கள்”

Thousands Of Workers Return Home As Malaysia Fully Reopens
AF Photo

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த மலேசியா எல்லைகள் ஏப்ரல் 1 முதல் திறக்கப்பட்டுள்ளன.

மலேசியா தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறந்ததால், சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தன் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை… ஆண்டின் நடுப்பகுதியில் முந்தைய நிலைகளை எட்டும்!

பலர் கடந்த வியாழன் பிற்பகுதியில் இருந்து எல்லையில் வரிசையில் நின்று நள்ளிரவில் நடந்தோ அல்லது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலோ கடந்து சென்றனர்.

இரு நாடுகளையும் இணைக்கும் ஜொகூர் காஸ்வேயில் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காகக் காத்திருந்தனர், அப்போது பின்னணியில் வாணவேடிக்கைகள் சத்தம் காதை கிழித்தது.

காஸ்வே மூடப்படுவதற்கு முன்பு தினமும் 350,000 க்கும் மேற்பட்ட மக்கள் அதைக் கடந்து செல்வர், அதில் பெரும்பாலும் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் அடங்குவர்.

ஏப்ரல் 1 முதல் நாள் மாலை 5 மணி நிலவரப்படி, உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 33,700 பயணிகள் கடந்து சென்றதாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

இதில் 6,100 பேர் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும், மேலும் 27,600 பேர் இரண்டு நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக மலேசியாவிற்கு சென்றதாகவும் CNAவின் கேள்விகளுக்கு பதிலளித்த ICA கூறியது.

சிங்கப்பூரில் இனவெறி பிரச்சனை – இந்திய மற்றும் மலாய் மக்களின் கருத்து