“நாட்டின் எல்லைகளை விரைவில் திறக்க போறோம்” – கிரீன் சிக்னல் கொடுத்த நாடு

மலேசியாவின் எல்லைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதிப்படுத்தினார்.

வரும் மே மாதம் கொண்டாடப்பட உள்ள நோன்பு பெருநாள் தினத்தில் அதிகமான மலேசியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பார்கள், அதற்கு இந்த எல்லை திறப்பு வாய்ப்பளிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊழியர்கள் உட்பட சில வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு Work permit அனுமதி!

“புருனே மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளுக்கு தரைவழி VTL சேவையை செயல்படுத்த மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.”

சிங்கப்பூருடன் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட VTL ஏற்பாடும் அத்துடன் சேரும் என்றும், இந்தோனேஷியாவுடனான மற்றொரு திட்டம் இன்னும் திட்டமிடலில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி 21 அன்று சிங்கப்பூருடன் வான்வழி மற்றும் தரைவழி VTL ஏற்பாட்டை செயல்படுத்தியது குறித்து திரு இஸ்மாயில் சப்ரி கூறினார்.

சுமார் 200,000 மலேசியர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே பயணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்