11 வயது சிறுவன் மீது மோதிய சிவப்பு நிற கார்! – முகத்தில் ரத்தத்துடன் சாலையில் கிடந்த பரிதாபம்;கூச்சலிட்ட சிறுவனுக்கு கிடைத்த உதவி!

sengkang-car-accident-hit-boy-mothership.sg
சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் நவம்பர் 16ஆம் தேதி 11 வயது சிறுவனைக் கார் மோதி விபத்துக்குள்ளாக்கியது.கார் மோதியதில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
Compassvale Drive பகுதியில் பிற்பகல் 2:38 மணியளவில் விபத்து நடைபெற்றுள்ளது.விபத்தில் அடிபட்ட சிறுவன் முகத்தில் ரத்தத்துடன் சாலையில் கிடந்ததாக அருகிலிருந்தவர்கள் கூறுகின்றனர்.வலியில் அச்சிறுவன் கூச்சலிட்டு உதவிக்காக அழைத்துள்ளான்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் சிறுவனுக்கு உதவி செய்தனர்.சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் கோரி தொலைபேசியில் தொடர்பு கொண்ட பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்ததாக ஒருவர் கூறினார்.
KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான்.அப்போது அவன் சுயநினைவுடன் இருந்துள்ளான்.

பேருந்து நிறுத்தத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.சிறுவன் பேருந்தைப் பிடிப்பதற்கு சாலையைக் கடக்க முற்பட்ட போது சிவப்பு நிற கார் அவன் மீது மோதியது.
அதன் ஓட்டுநர், 61 வயதான ஒருவர், நிலைமையை ஆய்வு செய்ய காரில் இருந்து இறங்கினார்.ஏற்கனவே,விபத்துக்குள்ளாகி பழுதான கார்தான் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.
காரில் பயணிகள் யாரும் இல்லை.காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓட்டுனர் விசாரணைக்கு உதவி வருகிறார்.