உணவகத்தின் உள்ளே பாட்டிலில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு உதவி செய்யும் பெண்… “இதான் ஒழுக்கமா?” – நெட்டிசன்கள் காட்டம்

boy-pee-bottle-tiong-bahru-food-court
COMPLAINT SINGAPORE

உணவகத்தின் உள்ளே கடந்த ஏப். 16 அன்று, பாட்டிலில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு உதவி செய்யும் பெண் அடங்கிய புகைப்படம் COMPLAINT SINGAPORE என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

சிறுவன் நாற்காலியில் நின்றுகொண்டுள்ளார், அருகே ஒரு கிண்ணத்தில் உணவு இருக்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறுவன் பாட்டிலில் சிறுநீர் கழிக்க பெண் ஒருவர் உதவி செய்கிறார்.

“மூன்றாண்டுக்கு பிறகு வாழை இலையில் வயிறார சாப்பிட்டேன்”… லிட்டில் இந்தியாவில் தமிழக ஊழியர்கள் கலந்துகொண்ட விருந்து!

அங்கு என்னமோ நடக்கிறது என்பதை போல, சுற்றியிருந்தவர்கள் நிற்பது இருப்பது போல் நமக்கு தோன்றுகிறது.

உணவகத்தின் உள்ளே சற்று அருகாமையில் கழிப்பறை உள்ளது என்றும் அந்த புகைப்பட தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு பேஸ்புக்கில் 1,000 க்கும் மேற்பட்ட கருத்து எதிரலையும், 800 க்கு மேற்பட்ட பகிர்வுகளையும் பெற்றுள்ளது.

அதாவது இந்த சம்பவம் தியோங் பாரு பிளாசாவில் உள்ள Food court ஒன்றில் நடந்ததாக தெரிகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். “இது சுகாதாரமற்றது மற்றும் குழந்தைக்கு தவறான போதனை செய்யப்படுகிறது” என்று கருதினர்.

அவர்கள் கழிப்பறைக்குச் சென்றால் தங்கள் இருக்கைகள் மற்றும் ஐஸ் கிரீம் பறிக்கப்படலாம் என்று அந்தப் பெண் அஞ்சி இருக்கலாம் என்பதை சிலர் கூறினர்.

எப்படி இருந்தாலும் சுத்தம், ஒழுங்குமுறை மிக முக்கியம். அதே போல குழந்தைகளுக்கு சமூக பொறுப்பு கலந்த ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது நம் கடமை.

விபத்தில் சிக்கிய மகனின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் கலங்கிய தயார்… S$233,000 மேல் அள்ளிக்கொடுத்த நல்லுள்ளங்கள்!