ஏழு வயது சிறுவன் மீது மோதிய மினி பஸ்: 5மீ வரை இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

boy-school-minibus-road
Google Map Street View

பள்ளி மினி பேருந்து மோதியதில் ஏழு வயது சிறுவன் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

மோதியது மட்டுமல்லாமல் அவரை 4 மீ முதல் 5 மீ வரை பேருந்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

பேருந்துக்கு முன்னால் சாலையைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மார்ச் 27 அன்று மதியம் 2 மணியளவில் பிளாக் 386 புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5க்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

இதனை அடுத்து ஏழு வயது சிறுவன் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், 57 வயதான பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.